முதல் பக்கம் செல்க
முரளி ஒரு குறும்புக்காரச் சிறுவன். அவன் எப்போதும் விளையாடியபின் பொம்மைகளை உடைத்துவிடுவான்.
உடைந்த பொம்மைகள் அவன் அறையெங்கும் கிடக்கும்.
அவனுடைய தாயார் அவனுக்கு எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவன் அதைக் கேட்பதே இல்லை.
ஒருநாள் இரவு¸ முரளி திடுக்கிட்டு எழுந்தான். அவன் முன்¸ கால் உடைந்த தவளை ஒன்று நின்றுகொண்டிருந்தது.
அடுத்து¸ இறக்கைகள் இல்லாத பட்டாம்பூச்சி அவன் முன்னே வந்தது.
அதைத் தொடர்ந்து காதுகள் இல்லாத முயல் ஒன்று அங்கே தாவித் தாவி வந்தது. முரளிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அடுத்த நிமிடம்¸ சக்கரம் இல்லாத வண்டி ஒன்று அங்கே வந்தது.
இறுதியாக¸ கண்கள் இல்லாத கரடி ஒன்று தட்டுத்தடுமாறி அங்கே வந்தது.
எல்லாப் பொம்மைகளும் கோபத்துடன் முரளியை நெருங்கின. அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது. பயத்தில் அவன் உரக்க அலறினான்.
முரளி திடுக்கிட்டு எழுந்தான்.
மறுநாள் முரளி தன் அறையில் கிடந்த பொம்மைகளை எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைத்தான்.
தவளையின் காலை ஒட்டி வைத்தான். பட்டாம்பூச்சியின் இறக்கைகளை ஒட்டி வைத்தான்.
முயலின் காதுகளை இணைத்தான். வண்டியில் சக்கரத்தைப் பொருத்தினான். கரடியின் கண்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒட்டினான்.
இப்போது பொம்மைகள் எல்லாம் பார்ப்பதற்கு அழகாக இருந்தன.
அன்றிரவு முரளிக்கு யாரோ தன் கையைப் பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. அவன் யார் என்று பார்த்தான்.
எல்லாப் பொம்மைகளும் அவன் முன் நின்றன. அவை முரளியை விளையாட அழைத்தன. அவன் அவற்றுடன் மகிழ்ச்சியாக விளையாடினான்.
  
அறையில் யாரும் இல்லை. எல்லாம் அடுக்கி வைத்த இடத்தில் இருந்தன. முரளி தான் கண்டது கனவு என்று உணர்ந்தான். அம்மாவிடம் தான் கண்ட கனவைப்பற்றிக் கூறத் துள்ளிக் குதித்து ஓடினான்.
PAGE NUM